மீண்டுமொருமீழல்.

எனது வலக்கரம்
எனைவிட்டுப் போனது.
எனது துணைவனை நான் இழந்து போனேன்.
ஓர் கைம்பெண்ணின் சோகம்
எனைச் சூழ்ந்து கொண்டது.
வெற்றுத் தீப்பெட்டியுள்
ஒரே ஒரு தீக்குச்சி...
பக்குவமாய் பாதுகாத்து
ஒளியேற்றும் வேளையில்
ஓர் பெருங்காற்று அதையும் அள்ளிச்சென்றது.
என் செய்வேன் தோழனே...
போய்...விட்டாய்.
போ.......
போராளிகள் மரணிப்பதிலலை
மீண்டுமொருமுறை உச்சரிக்கிறேன்.
(என் தோழன் வழுதியின் நினைவாக)

1 Comments:
மிகப்பரிய இழப்பு... ஈடுகட்ட முடியாத இழப்பு ...வேதனையும் சோதனையும்... என் செய்ய? விதியின் நியதியால் குறித்திட்ட காலக் கோட்டை மனித சக்தியால் என்ன செய்ய முடியும்? அவன் ஆத்மா இறையடியில் சாந்தி அடையட்டும்.. எனது பிரார்த்தனைகள்...
Post a Comment
<< Home