
பெரு வெளிப் பெருமூச்சு
உயிர்த்தெழும் காலம் ஒன்றிற்காக..
ஒளிவிதைப்போனாகித் திரிந்த- உன்
காலடிச் சுவடுகள் பற்றி...
பின்னலைந்து
கொண்டிருக்கின்ற...
இது நாள்....
காற்று ஆர்க்கும் கடற் பெரு வெளிக் குரலாய்..
உனது கவிதைகள் எம்முள் பற்றி எரிகிறது...!!!
வீட்டில் நாமெல்லோரும்
ஒற்றைத் திரியாய் உருகினோம்...!
யாரறிவோம்
ஆதிநிர்வாணி
பேரண்டத் தேரேறி
பாசிபடர்ந்த கற்பாறை ஒன்றின்
ஆதிக் குடியிருப்பிற்கு
அவசரமாய் திரும்புவாரென்று....!
11.12.2006
சு.வி நினைவில்..தா.பா எழுதியது.

2 Comments:
அன்பு நண்பருக்கு,
‘காற்று ஆர்க்கும் கடற் பெரு வெளிக் குரலாய்
உனது கவிதைகள் எம்முள் பற்றி எரிகிறது’
துயர்மிகுந்தவை எனினும் அழகிய சொற்செறிவு. தா.பா. என்பது?
வைக்கம் முகம்மது பஷீர் படித்திருக்கிறேன். ‘மதிலுகள்’இப்படிக் கொஞ்சம் பெயர்கள் நினைவில்லை. நீங்கள் பரிந்துரைக்கும் நூல்களைப் பார்க்கும்போது… ம்… என்னைப்போல ஒருவர் என்று நினைக்கத் தோன்றுகிறது. நீங்கள் ‘பெயரிலி’யா? இல்லைத்தானே… நாங்களும் கனடாவில் நாடகம் என்று ஏதோ போட்டதாக பேர் பண்ணினோம். முறையான பயிற்சி, அறிவு என்றெல்லாம் கிடையாது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நாடகம் போட்டிருக்கிறீர்கள் எனும்போது நிச்சயமாக நீங்கள் நல்ல தேர்ச்சி பெற்ற கலைஞராக இருக்கவேண்டும். உங்களுக்கு மின்னஞ்சல் முகவரி இருக்கிறதா… இருந்தால் அனுப்பவும். பதில் எழுதினால் திரும்பி வருகிறது.
சூர்யகுமார், உங்கள் கவிதைகளைப் பார்த்தேன். அடர்த்தி அதிகம். புதுக்கவிதைளை 'கவிதைக்குண்டு' என நான் (இன்றைய பதிவு) வர்ணித்ததற்கு சரியான எடுத்துக்காட்டு உங்கள் கவிதைகள் எனச்சொல்வேன். படங்களும் கவிதை பாடுகின்றன. உங்களின் கவிதைக்குண்டுகள் என்னுள் வெடித்துச் சிதறும் வரை காத்திருங்கள். ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியே எழுதவேண்டும்.
Post a Comment
<< Home