Saturday, December 09, 2006

வில்வரத்தினம் எனும் கவிஞனே


இப்படியே அற்புதமான படைப்பாளிகளை நான் இழந்து போனேன்.
சு. வில்வரத்தினம்
ஈழத்துக் கவிதையில் புதிய பரிமாணங்களைச் சேர்த்தவன்.
அவன் கவிதை போலவே அவனும் நல்லவன்...வல்லவன்.
காற்று...
அவன் கவிதையை ....
இப் பிரபஞ்சத்தில் எழுதட்டும்.
இம் மண்ணின் ஒவொரு துகளும்....
அவன் கவி வரியில் ஏதொவொன்றை உச்சரிக்கட்டும்.....

3 Comments:

Blogger தமிழ்நதி said...

அன்பு நண்பருக்கு,

தொடர்ச்சியாக எனது வலைப்பதிவுக்கு வந்து உற்சாகமூட்டும் உங்களுக்கென் நன்றிகள். சில விடயங்களை விவாதித்துப் பயனில்லை என்றுணர்கிறேன். ஆனால், ஒரு பிரச்சனையைக் கண்டும்காணாமற் செல்லும்போது இந்த விழியிருந்து என்ன பயன்…? ஆறாம் அறிவென்று நாமெல்லாம் சொல்லிக்கொள்வதன் பொருளென்ன…? சிலசமயங்களில் கோபம் வருகிறது. அது சமூகத்தின் மீதான வெறுப்பாக மாறிவிடக்கூடாதென்பதில் கவனமாக இருக்கிறேன். அதனால்தான் அந்தக் கோபத்தை எழுத்தில் காட்டுகிறேன் அல்லது கொட்டுகிறேன். ஆண்களிடத்தில் நிச்சயமாக எனக்குக் கோபமில்லை. பால், இனம், மதம், நாடு சார்ந்த பொதுப்புத்தி எனக்கில்லை. தமிழ்நதி என்றால் இப்படித்தான் என்றொரு சித்திரம் வாசிப்பவர் மனதில் வந்துவிடாமல் ‘இன்றிலிருந்து எனது நடத்தைகளை மாற்றியமைத்துக்கொள்ள முயலவேண்டும்’என்று யாராவது ஒருவர் நினைப்பாராயின் அதுதான்…. மகிழ்ச்சி.
இன்றைக்கு எப்படியும் அம்பையின் ‘பயங்கள்’வாசித்துவிடுவேன். நீங்கள் நிறைய வாசிப்பவராக இருக்கவேண்டும். எனக்கு புத்தகங்கள் மீது விவரிக்கவியலாத காதல் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், நடைமுறை வாழ்வின் நிர்ப்பந்தங்களால் சில ஆண்டுகள் வாசிப்பிலிருந்து விலகியிருக்க வேண்டியேற்பட்டது. இப்போது அந்தக் கட்டுக்களிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டுவிட்டேன். வேறு என்ன நல்ல புத்தகங்கள் என்று பரிந்துரைத்தால் வாசிப்பேன். புத்தகங்களும் உங்களைப் போன்ற நல்லவர்களின் நட்பும்தானே வாழ்வின் ஆதாரம்.

நட்புடன் நதி

3:30 AM  
Blogger sooryakumar said...

நதி....
தயவுசெய்து என்னை விடுங்கள்.
நான் கலையை ரசிக்கும் ஒரு அற்ப ஜீவி.என்றே வைத்துக்கொள்ளுங்கள்..! நீங்கள் தொடர்ந்து இந்த உலகைக் கிழிக்கவேண்டும்...உண்மைகளைச் சொல்லவேண்டும். ஒரு உற்ற நண்பனாய் உண்மையின் காவலானாய் என்றும் உங்கள் அருகிலிருப்பேன்.
நிற்க...
சுல்விகா.!சல்மா அல்ல(அவாவும் நல்லா எழுதுவா)ஒரு ஈழத்துப் பெண்.
அண்மையில் அற்புதமாக எழுதுறா. கிடைத்தால் வாசியுங்கள்.
நன்றி.

3:54 PM  
Blogger யசோதா.பத்மநாதன் said...

மிக அருமையான பதிவுகள் சூர்யா.எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் காதலிலும் காருண்யத்திலும் ஊறப் போட்டு அவை சொட்டச் சொட்ட கவிதைக் கொடியில் உலரப் போட்டிருக்கின்றீர்கள்.பொருத்தமான படங்களும் கூடவே.

அருமை.இந்தப் பக்கம் வந்ததில் மகிழ்ச்சி.

4:49 AM  

Post a Comment

<< Home