Sunday, December 31, 2006

மீண்டுமொருமீழல்.


எனது வலக்கரம்
எனைவிட்டுப் போனது.

எனது துணைவனை நான் இழந்து போனேன்.
ஓர் கைம்பெண்ணின் சோகம்
எனைச் சூழ்ந்து கொண்டது.

வெற்றுத் தீப்பெட்டியுள்
ஒரே ஒரு தீக்குச்சி...
பக்குவமாய் பாதுகாத்து
ஒளியேற்றும் வேளையில்
ஓர் பெருங்காற்று அதையும் அள்ளிச்சென்றது.

என் செய்வேன் தோழனே...
போய்...விட்டாய்.

போ.......
போராளிகள் மரணிப்பதிலலை
மீண்டுமொருமுறை உச்சரிக்கிறேன்.

(என் தோழன் வழுதியின் நினைவாக)

Tuesday, December 12, 2006



பெரு வெளிப் பெருமூச்சு

உயிர்த்தெழும் காலம் ஒன்றிற்காக..
ஒளிவிதைப்போனாகித் திரிந்த- உன்
காலடிச் சுவடுகள் பற்றி...
பின்னலைந்து
கொண்டிருக்கின்ற...
இது நாள்....

காற்று ஆர்க்கும் கடற் பெரு வெளிக் குரலாய்..
உனது கவிதைகள் எம்முள் பற்றி எரிகிறது...!!!

வீட்டில் நாமெல்லோரும்
ஒற்றைத் திரியாய் உருகினோம்...!

யாரறிவோம்
ஆதிநிர்வாணி
பேரண்டத் தேரேறி
பாசிபடர்ந்த கற்பாறை ஒன்றின்
ஆதிக் குடியிருப்பிற்கு
அவசரமாய் திரும்புவாரென்று....!

11.12.2006
சு.வி நினைவில்..தா.பா எழுதியது.

Saturday, December 09, 2006

வில்வரத்தினம் எனும் கவிஞனே


இப்படியே அற்புதமான படைப்பாளிகளை நான் இழந்து போனேன்.
சு. வில்வரத்தினம்
ஈழத்துக் கவிதையில் புதிய பரிமாணங்களைச் சேர்த்தவன்.
அவன் கவிதை போலவே அவனும் நல்லவன்...வல்லவன்.
காற்று...
அவன் கவிதையை ....
இப் பிரபஞ்சத்தில் எழுதட்டும்.
இம் மண்ணின் ஒவொரு துகளும்....
அவன் கவி வரியில் ஏதொவொன்றை உச்சரிக்கட்டும்.....